துப்பாக்கியால் சுட்ட மோசின் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்கு பின்பு இர்ஃபான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இர்ஃபான் என்ற அவர், மக்களை வாளை காட்டி மிரட்டும் போது, காவல் கண்காணிப்பாளர் சித்தார் சவுத்திரி இவரை பிடிக்க துரத்தியுள்ளார். ஆனால், அந்த நபர் நூதகமாக அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இர்ஃபானுக்கு உடந்தையாக இருந்த மோக்ஷின் என்பவர், சித்தார் சவுத்திரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டால் எஸ்பி சவுத்திரி காயமடைந்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட மோசின் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்கு பின்பு இர்ஃபான் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்ற ராமநவமி விழாவின் போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post