மதுரை மாநகராட்சிக்குள் மேயர் அறைக்குள் மேயரின் கணவர் பொன் வசந்தும், கவுன்சிலர் அல்லாத தி.மு.க-வினரும், பெண் கவுன்சிலர்களின் உறவினர்களும் இருந்துகொண்டு நிர்வாகம் செய்வதாகவும், அவர்களால்தான் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
பின்னர், ஒரு மணி நேர போராட்டத்துக்குப்பிறகு மேயர் தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மேயரை கூட்ட அரங்குக்கு அழைத்து சென்றனர்.
செய்தியாளர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்திருக்கிறார்.
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க-வினர், செய்தியாளர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Discussion about this post