மக்களின் நலனுக்காக கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசப்படுகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி வேதனையுடன் கூறினார்.
இந்த சுரங்கப்பாதைகளை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:புதுடில்லியை அழகாக்க, கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எக்ஸ்பிரஸ் சாலைகள், மெட்ரோ ரயில் பாதைகளை இரு மடங்காக அதிகரிப்பது, டில்லி – மீரட் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பணிகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். வரும் நாட்களில், சர்வதேச அளவில் சிறந்த தலைநகரமாக புதுடில்லி இருக்கும். இது, ௧௩௦ கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு பெருமை யளிக்கும். நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்கள்நலனுக்காகவும், பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆனால், இத்திட்டங்கள், நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூசப்படுவது வேதனைஅளிக்கிறது.நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலனில் அரசியல் என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.நாட்டின் பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பிரகதி மைதானம் துவக்கப்பட்டது. ஆனால், அதன் மேம்பாட்டில் அக்கறை காட்டப்படவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளில் தான், இந்நிலை மாறியுள்ளது.தற்போது அமைக்கப்பட்டுள்ள 1.௬ கி.மீ. நீள பிரதான சுரங்கப் பாதை, கிழக்கு டில்லி, நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் இருந்து, இந்தியா கேட் மற்றும் மத்திய டில்லியின் பிற பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக இருக்கும்.
இதனால், பெட்ரோல் செலவு பெரிய அளவில் மிச்சமாகும். சுற்றுச்சூழல் மாசும் குறையும். மக்களும் தனி வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து, மெட்ரோ ரயில்களில் பயணிக்க வேண்டும். இந்த சுரங்கப்பாதைகளின் சுவர்களில் இந்திய கலாசாரம், பறவைகள், ஒரு ஆண்டுகளின் ஆறு பருவங்கள் ஆகியவற்றை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், மிக சிறப்பாக உள்ளன. இந்த ஓவியங்களை பள்ளி மாணவர்கள் பார்க்க வசதியாக, ஞாயிறுதோறும், மாலை ௪:௦௦ – ௬:௦௦ மணி வரை சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கலாம்.இவ்வாறு பிரதமர் பேசினார்.
பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான சுரங்கப்பாதையை காரில் சென்று பார்வையிட்ட மோடி, மற்ற சுரங்கப்பாதைகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது, ஒரு சுரங்கப்பாதையில் கிடந்த குப்பைகளை சேகரித்து, அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார்.
Discussion about this post