திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). கட்டிடத் தொழிலாளி. இவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்திருந்தார்.
வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை வைத்தும், கடன் வாங்கியும் வீடு கட்டி வந்த நிலையில், மேற்பார்வையாளர் மகேஸ்வரன் தவணைத் தொகையை விடுவிக்காமல் இழுத்தடித்து வந்ததால் மனமுடைந்த மணிகண்டன், நேற்று முன்தினம் மாலை வீட்டில் விஷம் குடித்துள்ளார். அப்போது, பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வீடியோ பதிவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகேஸ்வரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொல்லு மாங்குடியில் மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
Discussion about this post