இதில் நகர பகுதியில் அடுத்த பிளாக் காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு என்ன சர்ச்சை எழுந்துள்ளது.கர்நாடகா காங்கிரஸ் கட்சியில், 486 பிளாக் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் முடிய போகிறது. 45 நாட்களுக்குள் புதிய பிளாக் தலைவர்களை தேர்ந்தெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வரிசையில், தங்கவயல் நகர பிளாக் தலைவராக மதலை முத்து; கிராம பிளாக் தலைவராக ராதாகிருஷ்ண ரெட்டி இருந்து வருகின்றனர்.தங்கவயல் எஸ்.சி., தொகுதி என்பதால், இரு பிளாக்குகளுக்கும் எஸ்.சி., அல்லாதோர் தலைவர்களாக இருந்து வந்தனர். அடுத்த சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், பிளாக் காங்கிரஸ் பதவிக்கு வருபவர், கட்சியில் சீனியாரிட்டி, கட்சி வளர்ச்சியில் ஈடுபாட்டில் இருப்பவர், எதிர்க்கட்சியினருக்கு பதில் தரும் ஆற்றல், கட்சியை வழி நடத்தும் பண்பு, தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பக்குவம், தாராளமாக செலவழிக்கும் சக்தி கொண்டவர்கள் தேவைப்படுவதாக மேலிடம் தெரிவித்துள்ளது.ஆனாலும், இவைகளை விட தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர் தான் பிளாக் தலைவர் ஆக வாய்ப்பு உள்ளதென சீனியர்களே கூறுகின்றனர்.காங்கிரஸில் நகராட்சி உறுப்பினர்களுக்கு தான் முன்னுரிமை தரப்படுகிறது.
கட்சித் தொண்டர்கள் எல்லாம் இரண்டாம் நிலையில் தான் உள்ளதாக சிலரின் கருத்து.நகராட்சி தலைவர் முனிசாமி, முன்னாள் தலைவர் ரமேஷ் ஜெயின் ஆகிய இருவருக்கும் தகுதி உள்ளதாக இருதரப்பு ஆதரவாளர்களின் கருத்தாக இருந்தாலும், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பட்டியலில் சம்பத்குமார், கார்த்திக், ஜெயபால், புண்ணிய மூர்த்தி, அனந்த கிருஷ்ணன், பிரேம் சந்த் ஆகியோரும் உள்ளனர்.இதை தவிர ரூபகலா எம்.எல்.ஏ., வின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற லிஸ்ட்டும் ஒன்று உள்ளது. நகராட்சி முன்னாள் துணைத் தலைவரான பெண் ஒருவரை நியமிக்கவும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. காங்கிரசில் பிளாக் தலைவர் பதவிக்கு இப்போதே நீயா, நானா போட்டி ஏற்பட்டுள்ளது.
Discussion about this post