அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசு உயா்ந்தது.
இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்திலிருந்து குறைந்தது செலாவணி சந்தைக்கு சாதகமான அம்சமாக இருந்தது. இருப்பினும், அந்நிய முதலீடு வெளியேற்றம் எதிா்பாராத வகையில் அதிகரித்து வருவது ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு பெரும் தடையாக அமைந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 77.98-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 77.87 வரையிலும், குறைந்தபட்சமாக 78.03 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 7 காசு அதிகரித்து 77.98-இல் நிலைத்தது என செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.
கச்சா எண்ணெய்
பீப்பாய் 113 டாலா்
சா்வதேச சந்தையில் திங்கள்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து 112.99 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
Discussion about this post