தேன் குரலுக்கு சொந்தக்காரியான சூப்பர் சிங்கர் பிரியங்கா ஜூனியர் சீசனில் கலந்து கொண்டார். அவரின் குரலுக்கு நடுவர்கள் மட்டுமில்லை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் கூட மெய் மறந்து போய்விடுவார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து இசை ஜாம்பவான்களும் பிரியங்காவை புகழாமல் இருந்தே இல்லை. பாடும் திறமையை காட்டிலும் பிரியங்கா இயல்பாகவே மிகவும் அமைதியானவர். அதிகம் பேச மாட்டார் எனவும் போட்டியாளர்கள் பலமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளனர். ’மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்’ இந்த பாடலை எந்த இடத்தில் கேட்டாலும் முதலில் வரும் முகம் பிரியங்காவுடையது தான்.
இசையை தவிர படிப்பிலும் கவனம் செலுத்தியவர் இப்போது பல் மருத்துவர். இசை குடும்பத்தில் இருந்து வந்தவர் ஃபேஷன் பிளஸ் கெரியர் என அழகாக பேலன்ஸ் செய்கிறார். இது தவிர இசை ஆல்பங்களில் பாடி வீடியோ வெளியிடுகிறார். வெளிநாடு இசை கச்சேரிகளில் கலந்து கொள்கிறார். மறைந்த எஸ்பிபி உடன் பல மேடைகளில் பிரியங்கா பாடி இருக்கிறார் . இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு பிரியங்கா தனது 24 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்கு ரசிகர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்ளை கூறி இருந்தனர்.
கையோடு தனது பிறந்த நாள் புகைப்படத்தையும் பிரியங்கா வெளியிட்டு இருந்தார். 8வயது குழந்தையாக பார்த்த பிரியங்கா இப்போது வளர்ந்து விட்டார். குரலில் மட்டுமில்லை அழகிலும் ஜொலிக்கும் பிரியங்காவின் ஃபோட்டோவை பார்த்த ரசிகர்கள் படத்தில் நடிக்க ஏதாவது ட்ரை செய்கிறீர்களா? என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம், அந்த புகைப்படத்தில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் சேலையில் தேவதையாய் ஜொலிக்கிறார் பிரியங்கா.
Discussion about this post