திருப்பதி அடுத்துள்ள பேரூரு பகுதியில் மலை மீது கட்டப்பட்டுள்ள ஏழுமலையானின் தாயார் வகுலமாதா கோயிலில் நேற்று தாயார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஏழுமலையானின் தாயார் வகுலமாதாவுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் நாளை (23-ம் தேதி) நடைபெற உள்ளது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்கிறார்.
திருப்பதி ஏழுமலையானின் வளர்ப்பு தாயாக அழைக்கப்படுபவர் வகுலமாதா. இவருக்கு திருப்பதி அடுத்துள்ள பேரூரு பகுதியில் ஒரு மலை மீது கோயில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இக்கோயிலை புதுப்பிக்க பல விவாதங்கள் எழுந்தன. தற்போது ஆந்திர மாநில சுரங்கத்துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி முன்வந்து, அவரது சொந்த செலவில் கோயிலை புதுப்பித்து அதனை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து நாளை (23-ம் தேதி) வகுலமாதா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
Discussion about this post