தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து வெங்கட்பிரபு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வெங்கட் பிரபுவுக்கு இது முதல் பை லிங்குவல் படம் என்பதும், நாக சைதன்யா நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இந்நிலையில், இளையராஜா தெலுங்கில் பேசிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ”வாழ்த்துகள் வெங்கட்பிரபு. நான் இருந்தும், உன்னுடைய தந்தை இருந்தும், யாருடைய உதவியும் இல்லாமல், நீயாக வளர்ந்து படங்களை இயக்கி இந்த திரையுலகத்தில் மிகப்பெரிய இடத்தையும் பெயரையும் பெற்றிருக்கிறாய். அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உன்னுடைய புதிய படத்தின் பூஜையில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
All the best @vp_offl for your debut film in Telugu industry. pic.twitter.com/QNuFaCSrWp
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 23, 2022
Discussion about this post