இந்தியாவின் அடுத்த யுனிகார்ன் நிறுவனமாக லீட் ஸ்கொய்ர்டு உருவாகி இருக்கிறது.
நடப்பு ஆண்டின் 18வது யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது லீட் ஸ்கொய்ர்டு. இது இந்தியாவின் 103வது யுனிகார்ன் நிறுவனம். நடப்பு ஜூன் மாதத்தில் யுனிகார்ன் நிலையை அடையும் மூன்றாவது நிறுவனம் இது.
2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது. நிலேஷ் படேல், பிரசாந்த் சிங், சுதாகர் கோர்தி உள்ளிட்டோர் தொடங்கிய நிறுவனம். பெங்களூரு மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிரீயஸ் சி முதலீட்டை பெற்றது வெஸ்ட்பிரிட்ஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.1194 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இந்த முதலீட்டின் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு யுனிகார்ன் நிலையை அடைந்திருக்கிறது.
நிறுவனங்களுக்கு தேவையான விற்பனை மற்றும் மார்கெட்டிங் சாப்ட்வேர்களை தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனம் சாஸ் பிரிவில் (Software as a Service) செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் மட்டும் 15 நிறுவனங்கள் யுனிகார்னாக உள்ளன. இந்த நிறுவனத்துக்கு 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். பைஜூஸ், டன்ஸோ, கோடக் செக்யூரெட்டீஸ், வேதாந்து, அக்கோ, பிராக்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளராக உள்ளனர்.
திரட்டப்பட்டுள்ள நிதியை புதிய பகுதிகளில் விரிவாக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்படும், கூடுதல் பணியாளர்களை தேர்வு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. தற்போது 1200 பணியாளர்கள் உள்ளனர். அடுத்த 18 மாதங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.200 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டி இருக்கிறது.
Discussion about this post