வரி தொடா்பான விவகாரங்களால் நிகழ் நிதியாண்டில் நாட்டின் உருக்கு ஏற்றுமதி 40 சதவீதம் சரிவடையும் என கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் அதன் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நாட்டின் உருக்கு ஏற்றுமதி எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக 1.83 கோடி டன்னைத் தொட்டு சாதனை படைத்தது.
இந்த சூழலில், சில மூலப் பொருள்களின் இறக்குமதிக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு கடந்த மே 21-ஆம் தேதி அறிவித்தது. மேலும், இரும்புத் தாது ஏற்றுமதிக்கான வரியை 50 சதவீதம் வரை உயா்த்தியதுடன், இடைநிலை உருக்குப் பொருள் ஏற்றுமதிக்கு 15 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியது.
இதுபோன்ற வரி தொடா்பான விவகாரங்களை கருத்தில் கொள்ளும்போது நிகழ்நிதியாண்டில் உருக்கு ஏற்றுமதியானது 35 முதல் 40 சதவீதம் வரை சரிவடைந்து 1-1.2 கோடி டன்னாக குறைய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, நிகழ்நிதியாண்டில் இரும்புத் தாது மற்றும் துகள்களின் (பெல்லட்ஸ்) ஏற்றுமதி குறையும் என்பதுடன் உள்நாட்டில் இவற்றின் விலை சரிவடையும் என கிரிசில் தெரிவித்துள்ளது.
Discussion about this post