மேலும் கிர்கிஸ்தான் பிஷ்கேக்கில் நடந்த இந்த யு-17 மல்யுத்தப் போட்டிகளில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று 8 பதக்கங்களுடன் பிரமாதமாக முடித்தது.
ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை புதன்கிழமை வென்றனர்.
இந்திய ஃப்ரீஸ்டைல் அணி 188 புள்ளிகளுடன் ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது, கஜகஸ்தான் 150 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் 145 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
புதன்கிழமை தங்கம் வென்ற இந்திய வீரர்கள் நிங்கப்பா (45 கிலோ), சுபம் (48 கிலோ), வைபவ் பாட்டீல் (55 கிலோ), பிரதிக் தேஷ்முக் (110 கிலோ) வெள்ளியும், நரசிங் பாட்டீல் (51 கிலோ) மற்றும் சௌரப் (60 கிலோ) ஆகியோர் தலா ஒரு வெண்கலமும் வென்றனர்.
23 வயதுக்குட்பட்டோருக்கான கிரேக்க ரோமன் மல்யுத்தப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கும்.
Discussion about this post