பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 66’ படத்தின் பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் ஐதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் நடிகர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, நடிகை சங்கீதா, பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.
விஜய்
இந்நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘தளபதி 66’ படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகிறது என்றும் அதில் ஒரு பாடல் அரபிக் குத்து பாடல் பாணியில் விஜய்யின் நடனத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post